Wednesday, August 22, 2007

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


இந்த கவிதை இன்னொரு வலைப்பதிவிலிருந்து 'சுட்டது'.
இந்த கவிதையில் உள்ளது எல்லாம் உண்மை வரிகள் என்று எனக்கு பட்டது.

3 comments:

Anonymous said...

அர்த்தமுள்ள இந்துமதம் எத்தனை பாகம்?
அது இணையத்தில் எங்காவது உண்டா?
யாராவது பதிவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தை அத்தியாயம் அத்தியாயமாகத் தட்டச்சி வெளியிட்டுள்ளனரா?

Unknown said...

* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் II
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் III
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் IV
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் V
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் VI
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் VII
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் VIII
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் IX
* அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் X
http://www.tamildesam.org/great-writers/kannadhasan/arthamulla-indhumatham-9

mithran said...

kannadasanai vimarsanam seyyum thagudhi enakku illai endru ithai paarkkum neengal ninaikkalam..aanal nan avar alavukku oru kavingnanai irunthirunthal athai naane kooriyirupen.. aanal naan avarin miga theevira rasigan enakku antha thaguthiyum urimai undu.. now lets come to the point..
BOTHAI enbathu yaathana keeten endru naan keatu kudithu paarendru oru vealai iraivan sonnal antha saaraya anubavam than iraivana?

 
software software