கருவில் தோன்றி
உருவம் பெற்று
என் இனத்தவராலே
இரக்கப்பட்டு
தரையில் கிடத்தப்பட்டேன்.
உடல் உறுப்பின் மாற்றத்தினால்
சிலரால் வெறுக்கப்பட்டேன்.
சூடான சுவாசக்காற்று
என் மேல் பட்டு
உடல் சிணுங்கி
கண் விழித்தேன்
எனக்கு நெருக்கமான வாசம்.
எனக்கு உதிரம் கொடுத்து
உருவாக்கிய வாசம்.
சற்று கிழே பார்க்கிறேன்
உடலை வளர்க்கும்
உணவு உட்கொள்ள உதவும்
குழாயை காணவில்லை
என் வயிற்றில்
கொடி இருந்த இடத்தில்
முடி இருந்தது செந்நிறத்தில்.
நாவின் வேலை ஆரம்பமானது
உணவு உள்ளே செல்ல இதுதான் வழி.
செவியின் வழி ஒலி வந்தது
‘பெண்ணா’ என்ற சொல் வந்தது
அதுதான் நான் கேட்ட முதல் சொல்
எனக்கு பாலூட்டினாள்
அப்போதுதான் தெரிந்தது
அவள் என் தாய் என்று
தந்தை எனை பார்க்க வரவில்லை
தடை போட்டது அவர் தாய்.
என் பாட்டி.
வாரம் இரண்டு சென்றது
வருவார் என்று
வழி மேல் விழி வைத்தாள் என் தாய்.
வந்தார் அவரும் அவளை பார்க்க
இருட்ட தொடங்கியது இரவு தங்கினார்
என் அழுகை சத்தம்
போனது வீட்டார் உறக்கம்
என் அப்பா கோபம்
போனார் அவர் வீட்டோடு
என் தாயுடன் நானும் தங்கினேன்
நாள் குறித்து நால்வருடன் வந்து
ஊர் அறிய கூட்டிச் சென்றார்
என் அப்பா எங்களை ஓர் நாள்
பாட்டியின் சோகம் நான் பெண் ஆனது
அம்மாவின் சோகம் நான் ஆணாக பிறக்கவில்லை என்று
அப்பாவின் கோபம் என் அழுகையின் மேல்
அட! ஏன் இந்த கசப்பு?
முக்குக்கொருவர் முகத்தை வைத்து கொண்டா
இந்த வரவேற்பெனக்கு?
என்னாலா இந்த பிணக்கு?
புரியவில்லை இவர்கள் கணக்கு.!
சத்தம் கேட்கும் திசையைப் பார்ப்பேன்
சிலர் முகத்தருகில் வந்து முழியை பார்ப்பர்
முத்தம் கொடுக்க.
நீரை ஆகாரமாய் உண்ட நான்
சோறை ஆகாரமாய் உணகிறேன்
பள்ளி செல்லும் வயதடைந்தேன்
பள்ளி சென்றேன் படித்தேன் நானும்
ஓட்டப் பந்தயம் சேர ஆசை.!
தாயிடம் சொன்னேன் அவள் தந்தோ வசை.!
பட்டுப் பாவாடை கொடுத்தார்கள்
உடுத்திக்கொண்டேன்.
என் உடலில் சிற்ச்சில மாற்றங்கள்.
தாயின் அரவணைப்பு அதிகம் தேவைப்பட்டது.
பாவாடை தாவணியாக மாறியது என் உடை.
பள்ளி முடித்து கல்லூரி அடி வைத்தேன்.
ஆணிடம் பேச தடை.
விடுதி என்பதே எங்களுக்கு சிறை.
சிலரின் பார்வைகளால்
எங்கள் உடையை சரிபார்க்க வேண்டியிருந்தது.
பெண்ணீயம் பேசும்
பித்தர்கள் எல்லாம்
சித்தர்களாகவே தெரிந்தார்கள்.
பட்டம் வாங்கும் முன்
திட்டம் போட்டார்கள்
வீட்டிலுள்ளவர்கள்.
திருமணம் என்று சொல்லி
என் மனவிருப்பம் கேட்க்கவில்லை.
அவர் மனம் மகிழும் ஆடவனை
மாப்பிள்ளை என்றார்கள்.
வீடு என்பதே சிறையா?
விரும்பிப்போகும் அறையா?
பறவை நான் ஒரு கூட்டிலுருந்து
மறு கூடு வந்தேன்.
என்னவன் என்று
அவனுடன் போனேன்.
புது வீடு புது உலகம்
புது மனிதர்கள்
புது பழக்கம்.
எல்லாம் கற்றேன்.
இளமை நினைவுகள்
இனிமையாக தொடர்ந்தன.
என்னவரின் அன்னை உட்பட
பெரும்பாலனவர்கள் சொன்னார்கள்
‘பையனை பெத்து கொடுமா’ என்று.
அப்போது புரிந்தது
‘அரிது அரிது மானிடராய் (பெரிய-நீ-இடர்) பிறத்தல் அரிது’ என்று.
ஒளவையின் சொற் பிழையை திருத்தலானேன்
இப்படி ‘அரிது அரிது மாதாராய் பிறத்தல் அரிது’ என்று.
Thursday, September 6, 2007
ஆத்திச்சூடி பிழை..?
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Thursday, September 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ம்ம்ம்ம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். :(((((
வருகை தந்த கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.
Post a Comment