Thursday, October 20, 2011

வாழும் மனிதர்கள்

தேதி பார்த்து வேலை செய்து
நாதியற்று போகும் வேளையிலும்
வேலை செய்யும் மனிதர்கள்.

நாளை என்று எதுவும் இல்லை
இன்றுதான் எல்லாம் என்று இருக்க தெரியாமல்
வேளைக்கு கவலையில் மூழ்கும் மனிதர்கள்.

கோபம் தினம் கொண்டு
கோவிலில் குடியிருக்கும் தெய்வத்தை காண
வாழ வேண்டி வரிசையில் நிற்கும் மனிதர்கள்.

Tuesday, October 11, 2011

வெள்ளை இரவு.!

இருப்பதும் மறிப்பதும் இறைவன் செயல் என்று இருந்துவிடாமல்
இருக்கும் வரை உழைக்கும் எண்ணம் வேண்டும்
தேடும் தாகம் இருக்கும் வரை
ஓடும் தூரம் அதிகம் தான்!

ஊற்றின் ஆழம் தெரியாது
வாழும் வரை வாழ விடு
கண்மூடி இருக்கும் கரும் இரவை
விழி திறந்து மற்றுவோம்
வெள்ளை இரவாக.!

Sunday, October 2, 2011

ஒளிந்திருக்கும் கடவுள்

நான் நீ என்றில்லை
மேல் கீழ் என்றில்லை
உயர்வு தாழ்வு என்றில்லை
குளிர்ச்சி வெப்பம் என்றில்லை
காதல் காமம் என்றில்லை
நட்பு பகைமை என்றில்லை
எல்லாம் ஒன்றாகி உலகறியா ஒளிந்திருக்கும் கடவுளே
உன்னை வணங்குகிறேன்.

Sunday, July 10, 2011

குழப்பும்.. குழப்பம்..

பகுதி நேரம் பார்வை இல்லை
பார்த்த நேரம் பாவை இல்லை
சுழலும் நாக்கில் வாள் கொண்டு
நல்ல சூழலையும் கொன்று
பின்னுறுகி மண்ணில் மக்கும் எண்ணங்கள்.

கால சக்கரம் ஒரு பக்கம் மட்டுமே சுற்றுகிறது.
செக்கு மாடாய் சுற்றும் காலம்
என்னை எடுக்கும் வரை ஓயாது
அது வரை இந்த சுவாரஸ்யம் தொடரும்..

கதறும் மனதில் கண்ணீர் துளிகள்
பிஞ்சை கசக்கி நெஞ்சை உருக்குகிறது
அஞ்சும் குரல் அழும் குரல்
கர்வம் கண்ணில்
அடக்கும் ஆளுமை
ஆத்திரத்தின் உச்சம்.!

Tuesday, March 8, 2011

உலக மகளிர் தினம்

இம்மண்ணில் மனித இனம் தோன்றியது.
இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும்.

மண் வளத்தை நினைப்பவர்கள்
வன வளத்தை நினைப்பவர்கள்
பெண் வளத்தையும் நினைக்க வேண்டும்.

பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பார்
பெண் பெண் ஈன்றால் முகம் சுளிப்பார்
தன் இனத்தை தானே அழிக்க
நினைப்பதுவும் இவ்வினமே!

நதி ஆனாள்,
காற்று ஆனாள்,
மலை ஆனாள்,
தேசம் ஆனாள்,
தெய்வம் ஆனாள்,
ஆனால் அவளுக்கென்று
ஓர் வரம் கேட்க மறந்தாள்.

வீட்டிலும், நாட்டிலும்,
வெளியிலும், வெய்யிலிலும்
வேளை தவராமல் வேலை.

வேலை முடித்து வந்தாலும்
முடிக்காமல் வந்தாலும்
சமூகம் குத்தும் சொல்லால் வேலை.

ஆத்திரக்காரி, அன்புக்காரி,
அதிகாரக்காரி, அமைதிக்காரி
என்று தூற்றிப் போற்றி
இவ்வினத்தை எது வேண்டுமானாலும் செய்யலாம்.!
இவ்வினத்திற்கு கொண்டாடும் தினம் தான் உலக மகளிர் தினம்.!

Tuesday, February 15, 2011

மாறாக் காதல்.!

உன் முத்தங்கள் மொத்தமும்
என் உள்ளங்கையில் பொத்தி வைத்தேன்
உன் உதடின் கோடுகள் என் கை ரேகையாயின
அதுவே என் வாழ்கையின் ஆருடக் கோடுகளாயின
என் எண்ணத்தில் வண்ணம் சேர்க்க
என்று எண்ணம் கொண்டாய்?
உன் கண்ணத்தில் நாணம்
விண்ணொளியாய் மின்னுகிறது எதனால்?

வானம் பார்த்த பூமியாய் இருந்த என் மனம்
உன்னைப் பார்த்ததும்
வாசல் பார்த்த சாமியாய் நிற்கிறது!

சொல் இல்லா வாக்கியம் பொருள் ஆகாது
நீ இல்லா வாழ்கை இனிக்காது!
மாறன் அம்பினாலும் மறிக்காத காதல்
என்னுடைய மாறாக் காதல்

Monday, February 14, 2011

காதல்(லர்) தின(மு)ம்..!

கழுத்தில் கை வைக்கும் பிடி இருக்கும்
தன் முகம் மறைக்கும் விழி பிதுங்கும்
நா குளரும் சொல் உருளும்
கடலும் கடுகாகும் கடுகும் கடலாகும்
மலையும் மடுவாகும் மடுவும் மலையாகும்
உன் நிலை அழித்து தன்னிலைக்கு கொண்டுவரும்
சூழ் நிலை மறைக்கும் பித்து பிடிக்க வைக்கும்
ஆனால் மருந்தில்லை
உனக்கென நான் எனக்கென நீ என உளரச் சொல்லும்

வாழ வைக்கும் வழுக்கவும் செய்யும்
எல்லாம் இந்த கரும(மா)ந்திரக் காதல் செய்யும் வினை.

 
software software