போதிமரம் தேவையில்லை
போதனையும் தேவையில்லை
இப்புவியில் விழுந்துவிட்ட பின்னே
தப்பிக்க அவள்(ன்) தயயை வேண்டும்.
சோதனையும் வேதனையும்
சொத்தென ஆனபின்
பித்துபிடிக்காமல் இருப்பதும்
மேலோன் புண்ணியமே.
சமுதாய காயத்தை
கண நேரம் நினைத்தாலும்
நெஞ்சம் கணக்கிறது
விளை நிலங்கள்
வீடான பின்னாலே
சேற்றில் வளரும்
சோற்றிற்கு எங்கே போகும் இந்தக் கூட்டம்?
போதுமடா சாமி
பொல்லாப்பு வேண்டாம்
வீண் வேஷம் வேண்டாம்
மனித நேயம்தான் வேண்டும்.
அடுத்தவர் புலம்பலை கேட்கும் போது
நம் கதை எத்தனையோ மேலடா
என்று உள்ளம் சொல்லுகிறது.
ஆயிரம்தான் ஆனாலும்
ஆசை விதை முளைப்பதால்
வாழ்கை வாழ்ந்து விடவேண்டியதுதான்.
Monday, October 11, 2010
வண்ணம் வேண்டிய எண்ணம்
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Monday, October 11, 2010 0 பதில் மடல்
Sunday, October 3, 2010
கண்ணதாசன் கவிதை - குடும்பம்
பக்திமிக்க பூஜையறை காதலர்கள் பள்ளியறை
சக்தியோடு நாயகனார் தவம்புரியும் மேருமலை
அக்கரையும் இக்கரையும் அதன் நடுவே காவிரியும்
பக்குவமாய் ஓடுதல் போல் பயிலுகின்ற கல்வியறை
முற்றமது காமசுகம் முளைக்கின்ற பூமியல்ல;
மற்றுமொரு ஜீவனுக்கு வரவு சொல்ல வந்த இடம்
தம்பதிகள் உறவினிலே தாய்வயிற்றில் பிள்ளைவரம்
தாய்தகப்பன் குணம் போல சேய்க்குணம் தவழ்ந்துவரம்
ஆதலின் ஒன்றையொன்று
அநுசரித்துப் போவதுதான்
காதலிலும் இன்பம் வரும்
கண்மணிக்கும் நல்லகுணம்.
காதலில் மனைவியவள்
கருவடைந்த பின்னாலே
ஐந்துமா தம்வரைக்கும்
அழுவதென்ப தாகாது
அன்னை அழுதாலோ அலறியவள் துடித்தாலோ
அங்கம் பழுதுபட்டு அழகிழந்த பிள்ளைவரும்
கண்ணிரண்டும் கெட்டுவரும் கைகால் விளங்காது
வாய்மொழியும் தேறாது வாரிசுக்கும் உதவாது
எப்போதும் சிரித்தபடி இருக்கின்ற பெண்மயில்தான்
தப்பாமல் நல்ல தொரு தங்கமகன்(ள்) ஈன்றேடுப்பாள்
கணவன் அழகாக்க் கண்மணியை எதிர்பார்த்தால்
மனைவி மனம்நோகும் வார்த்தை சொல்லக் கூடாது.
அன்பு மொழிபேசி அரவணைத்து எந்நாளும்
தன்னையே மனைவியவள் சார்ந்திருக்கச் செய்து விட்டால்
பொன்னை வடித்த்துபோல் புத்திரர்கள் பிறப்பார்கள்!
கணந்தோறும் கணந்தோறும் கணவனையே நினைத்திருந்தால்
அவள் பெறும் ஓர் பிள்ளை என்றும் அப்பாவைப் போலிருக்கும்
ஆளான பின்னாலே ஆண்டாண்டு பொறுத்தவள்தான்
நாளாகி வயதாகி நல்லமனம் முடித்தவள் தான்.
ஆசை நிறைந்தாலும் அடக்கம் மிகுந்தவள்தான்
ஆனாலும் அந்த அழுகுமயில் வாழ்க்கையிலே
சூலான பின்னால்தான் சுகம்காணும் மயக்கம் வரும்.!
தேடும் மனையாளைத் திருப்தியுடன் வைத்திருந்தால்
கூடுகின்ற சந்ததியும் குணத்தோடு வந்துதிக்கம்.
மணவாழ்வு வாழுகையில் மறுவார்த்தை ஆகாது!
தாய்கொடுத்த சீர்வரிசை சகிக்கவில்லை! என்பதுவும்
ஜாடையாய்ப் பேசுவதும் தரம் குறைத்துக் காட்டுவதும்
அப்பன் கொடுத்த்தொரு ஆழாக்கு என்பதுவும்
வடுவாக நின்றுவிடும் வாழ்நாளில் ஆறாது
கொண்டவள்மேல் ஓர்பொழுது கோபம் வருமென்றால்
சண்டாளி சூர்ப்பனகை தாடகைநீ என்றெல்லாம்
அண்டாவில் அள்ளிவந்து அளந்துவைக்க்கூடாது
நாளைக்குப் பார்ப்போம், நடப்பதெல்லாம் நடக்கட்டும்
என்றே படுத்துவிட்டால் எழுந்திருக்கும் வேளையிலே
பெண்டாட்டி அன்புவரும் பெரிய நினைவு வரும்.
கடுகு அரிசியினைக் கற்தரையில் கொட்டிவிட்டால் மறுபடியும் திரும்பாது!
ஆழாக்கு அரிசியிட்டு அதில் வாழ்வு வாழ்ந்தாலும்
தாளாத காதலுடன் தாய்போல ஊட்டிவிட்டால்
தேவர் அமுதமெல்லாம் ‘சீ என்றே ஆகிவிடும்
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் மனசுதான் காரணமாம்
இன்பமென எண்ணிவிட்டால் எப்போதும் இன்பமயம்
துன்பமெனத் தோன்றினாலோ தொலையாத துன்பமயம்.
ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை
சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!
ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே
ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.
சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே
காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!
குற்றமெல்லாம் பார்த்துக் குறை பேசத் தொடங்கிவிட்டால்
சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்ல்லை!
பற்றவைத்தால் வைத்த இடம் பம்பரம் போல் ஆடிவிடும்
தள்ளிவைத்தால் தங்கதும் தவிடாக மாறிவிடும்!
கையில் அரைக் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை
என்றிருக்கும் வேளையிலே இருப்பதையே பெரிதாக்கி
கொத்தாக்க் கீரைதனைக் கொழம்புவைத்துப் போட்டாலும்
சத்தமின்றிச் சாப்பிடுங்கள் தருவான் இறைவன்.
சண்டையிட்டு ஆவதென்ன சஞ்சலம்தான் மிஞ்சிவிடும்
அண்டை அயல்சிரிக்கு அத்தனையும் கேலிசெய்யும்.
பகலில் அக்கம்பக்கம் பார்த்தபின்னால் பேசுங்கள்,
அந்திபட்டால் எப்போதும் அதுகூடக்கூடாது
வீட்டுக் கதைகளுக்கு விபரங்கள் வேண்டுமென்றால்
கட்டாக்க் கட்டிலில் குலவுங்கள் பேசுங்கள்
பால்கணக்கோ மோர்க்கணக்கோ பட்டெடுத்த
கடைக் கணக்கோ பேசும் கணக்கெல்லாம் பிறர் முன்னால் பேசாதீர்!
தப்புக் கணக்கென்று சந்தேகம் கிளப்பாதீர்!
பெண்டாட்டி தப்பென்று பிறர்முன்னால் சொல்லிவிட்டால்
கொண்டாட்டம் ஊருக்கு கொட்டுவார் கையிரண்டை!
பால்போன்ற வேட்டியிலே பட்டகறை அத்தனையும்
பார்ப்பவர் கண்களுக்கு படம் போல தோன்றிவிடும்!
நாட்டுமக்கள் வாழ்க்கையெல்லாம் நாலும் கலந்துதான்
வீட்டுக்கு வீடு ஒரு விரிவான கதையிருக்கம்
உன்கதையைக் கேட்ட்தானால் ஊரார் அழுவதில்லை
சிலரோ சிரிப்பார்கள்; திண்டாடு என்பார்கள்
நாட்டிலா வாழுகிறோம்; நாலும் திரிந்திருக்கம்
காட்டில் உலாவுகிறோம்; கவனம் மிகத்தேவை!
எடுத்தஅடி ஒவ்வொன்றும் எச்சரிக்கையாய் விழுந்தால்
அடுத்த அடி தப்பாது ஆண்டவனார் துணையிருப்பார்!
இந்துமதப் பெண்களது எத்தனையோ துன்பங்கள்
மெளனம் எனும் தீயினிலே மாயமாய்ப் போவதுண்டு
வாய்க்கட்டு வேண்டும் என்று வகையாய் உரைப்பார்கள்!
அதற்குப் பொருளிரண்டு, ஆகாத வார்த்தைகளை
ஊரெங்கும் வீசாமல் உள்ளேவை என்பதென்று
வாய்ச்சுவையை நாடி வயிற்றைக் கெடுக்காமல்
வாய்க்கட்டு போடு என்னும் வகையான புத்தியொன்று!
பெருக்கத்து வேண்டும் பணிவென்றும் எந்நாளும்
சுருக்கத்து வேண்டும் உயர் வென்றும் சொன்னார்கள்!
வற்றாத செல்வங்கள் வளமாகச் செருகையில்
அடக்கம் பணியிருந்தால் அனைவருமே மதிப்பார்கள்!
இவ்வளவு பணமிருந்தும் எவ்வளவு பணிவென்று
ஊரார் புகழ்வார்கள் உன்னடியில் பணிவார்கள்
கையில் பணமில்லை கடனாளி யாகிவிட்டான்
என்றெல்லாம் உரார் ஏளனமாய்ப் பேசுகையில்
கைநிறைய மோதிரங்கள் கடிகாரம் சங்கிலிகள்
பட்டாடை கட்டி பவனிவர வேண்டும்நீ
அப்போது ஊறார் அதை என்ன சொல்வார்கள்
எவனோ புளுகுகிறான்; இவனா கடனாளி?
பெண்டாட்டி பேரில் பெரியபணம் வைத்துள்ளான்
என்பார்கள் நீயே இன்னுமொரு தொழில் செய்தால்
அவரே பணம் தந்து ஆதரிக்க வருவார்கள்
நான்குபுறம் கத்தி நடுவிலொரு முள்வேலி
முள்வேலி மீதே மோகனமாய் நாட்டியங்கள்
இதுதானே வாழ்க்கை! எதற்குக் கலங்குகிறாய்?
காலத்தைப் பார்த்துக் கணக்காய்த் தொழில் செய்தால்
ஞாலமே உன்கையில் நவின்றாரே வள்ளுவனார்
நீரில் அழுக்கிருந்தால் நீர்ருந்த மாட்டோமா?
காய்ச்சிக் குடிக்கின்றோம்; கலவைக்கு வேலையென்ன?
இடுக்கண் வருங்கால் நகு என்றொல் எந்நாளும்
அடுத்து வருவ ததுபோல் இருப்பதில்லை
சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்
இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன்.
இன்ப துன்பங்களுக்க இதுதான் நியதி என்றாள்!
கோடை வெயிலடித்துக் கொளுத்து கின்ற வேளையிலே
அம்மா மழைஎன் றவறுகிறோம், மழைவந்து
வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால்
வெய்யிலையே தெடி விடிகதிரை வணங்குகிறோம்!
கூடும் குறையும் குறைந்த்தெல்லாம் வளமாகும்
எப்போது எது நடக்கும் இறைவனுக்குத் தான் தெரியும்.
நடைபோடும் யந்திரங்கள் இவ்வுலகில் ஏதுமில்லை
போடும் நடையைப் பொடி நடையாய்ப் போடுங்கள்
நடைபோடும் வேலைதான் நாம்செய்யக் கூடுவது
பார்த்த நடந்து பக்குவமாய்த் தொடருங்கள்
அப்போதும் முதுகினிலே அடிவிழுந்தால் எல்லாமே
தப்பாத ஈசன் சாட்டை யென எண்ணுங்கள்
கண்ணீரால் எந்நாளும் கவலை மறைவதில்லை.
விண்ணாளும் வேந்தன் வீடுசெல்லும் காலம்வரை
எண்ணுவன எண்ணுங்கள் இயக்குங்கள் துன்பமில்லை.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Sunday, October 03, 2010 0 பதில் மடல்
Tuesday, September 14, 2010
உயிரின் செறுக்கு
சலனமில்லா சடலம்
பாதை தெரிந்த பயணம்
கிறக்கம் தரும் மயக்கம்
கிறங்க வைத்து உருக்கும்
சதையை கொஞ்சம் கிழிக்கும்
தனக்குள் இருந்து சிரிக்கும்
தானே மேல் என நினைக்கும்
எமனை காதலிக்கும்
விழியில் வழியும் நீராகும்
வலியில் பயிராகும்
வலிப்பதால் அது உயிராகும்.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Tuesday, September 14, 2010 1 பதில் மடல்
Monday, September 13, 2010
ஒரு ஆட்டின் கதை
பாசம் காட்டினர்
பரிவு ஊட்டினர்
மாலை மாட்டினர்
உயிரை எடுத்தனர்..
இலை தழை கொடுத்து கழுத்தருகில் தடவினார்
புல் கட்டை கீழே போட்டதால் குனிந்தேன்
நான் உண்ட புல் என் குடலுக்கு போகும் முன்
என் ஜீவன் என்னிடம் இல்லை..
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Monday, September 13, 2010 0 பதில் மடல்
Labels: ஆடு
Sunday, March 28, 2010
ஆவணப் படம்
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Sunday, March 28, 2010 1 பதில் மடல்
Labels: ஆவணப் படம், சமூகம், பெண்
Sunday, March 7, 2010
பெண் 'தான்'
பொன்னும் பெண் தான்
மண்ணும் பெண் தான்
விண்ணும் பெண் தான்
நதியும் பெண் தான்
நாடும் பெண் தான்
நிலவும் பெண் தான்
நினைவும் பெண் தான்
வீடும் பெண் தான்
வனமும் பெண் தான்
சொல்லும் பெண் தான்
புல்லும் பெண் தான்
உயிரும் பெண் தான்
காதலும் பெண் தான்
காமமும் பெண் தான்
உணர்வும் பெண் தான்
அன்பும் பெண் தான்
ஆசையும் பெண் தான்
அறிவும் பெண் தான்
அளவும் பெண் தான்
அனைத்தும் பெண் தான்
இருந்தும் ‘தான்’ யார் என்பதை அறியாதவள் தான் பெண்.
மார்ச் 8 உலக பெண்கள் தினம்.(!)
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Sunday, March 07, 2010 0 பதில் மடல்
Thursday, February 25, 2010
நானும் பெண்ணாய் பிறந்தேனே..!
பெண்ணாய் பிறந்தேனே
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
கவியும் புவியும் வியக்க
காவியம் யாவும் படைக்க
காலம் எதுவும் தெரியாமல் நானும்
பெண்ணாய் பிறந்தேனே.
கணிவாய் அன்பை கண்ணில் இருத்தி
கடலாய் ஆசையை மனதில் வைத்து
அழகாய் என் அம்மா பெற்றெடுக்க நானும்
பெண்ணாய் பிறந்தேனே.
உள்ளங்கையில் உலக உருண்டை போல்
பருப்பை சேர்த்து பதமாய் பார்த்து
அம்மா செய்த சாதம் அதை உண்டு
மகிழ நானும் பெண்ணாய் பிறந்தேனே.
வெள்ளை உள்ளம் கள்ளம் இல்லா
நல்ல உள்ளம் பிள்ளை சொல்லும்
நிலவின் ஒளியும் அதன் நிறமும்
கண்டு மகிழ நானும் பெண்ணாய் பிறந்தேனே.
ஆடி ஓடி விளையாடி
ஆட்டம் போட்டு கொட்டம் அடித்து
சட்டமில்லாமல் வெட்ட வெளியில் குதித்து ஆட
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
நகை அனிந்து சிகை பின்னி
வகை வகையாய் தின்பண்டம் செய்து
வக்கனயாய் ஆக்கி போட நானும்
பெண்ணாய் பிறந்தேனே.
அருமைகளும் பெருமைகளும்
அளவல்லாமல் இருந்தும் அகிலம் அறியாததால்
அதுவும் அறியாததால் உள்ளம் நொந்து கொள்ள
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
என் இனத்தை நானே வெறுத்து
ஆண்ணை ஈன்ற துடிக்கும் அறிவை பெற்று
பெண்ணை கொல்லும் மடமையை சமூகத்தில் வாழ
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
சாதிக்க துடித்து சந்தைக்கு வந்து
சத்தமில்லாமல் சாதனை செய்து
சாத்திரம் பேசும் மனிதரை பார்க்க
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
கள்ளத்தனமாய் காதல் வந்தும்
சொல்லதெரியாமல் சோகத் தவிப்பு சூழ்ந்தும்
நிலை கொள்ளாமல் என் நிலையை காண
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
அன்பின் ஊற்றை அகத்தினில் வைத்து
அகிலத்திற்கு அதனையும் அள்ளி தந்து
கிள்ளி தர தெரியா சமூகத்தில்
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
விடியும் நாள் விரைவில் வரும் என்று
விடிய விடிய உறங்கா விழியுடன்
நம்பிக்கை துணையுடன் காலம் கடத்தும் பெண்ணாய்
நானும் இந்த பூமியில் பிறந்தேனே.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Thursday, February 25, 2010 0 பதில் மடல்
Thursday, January 7, 2010
படைத்தானே...!
கண்ணை மூடிக் கொண்டு
கனவுகளை தொலைக்காமல்
காலங்களை கடத்தாமல்
காதலும் செய்யாமல்
கடமை மட்டும் செய்தால்
கடவுள் என்ன செய்வார்?
படைப்பை செய்தவன்
பாவத்தை ஏன் சொன்னான்?
பழக செய்தவன்
பண்பை ஏன் சொன்னான்?
உன் வார்த்தையை
ஏன் உதட்டிலேயே ஒட்டவைத்திருக்கிறாய்
உதிர்பதற்கு ஒரு யுகமா?
உள்ளத்தில் பூட்டி உறங்க வைக்காதே
உயரத்தில் வைத்து ஒதுக்கிவிடு
என்னிடம்
நம்பிக்கை
வளரும் போது நகங்களாய் நறுக்காதே
அதை விழுங்கவும் செய்யாதே
உன் இதயத்தை தாண்டி இறங்கும் போது
என்னில் கீறல்கள் ஏற்படுத்துகிறது
உன் நகங்கள் விரல்களில் இருந்தால்
கீரிடம் அணிந்த
தேவதைகளாய் இருக்கிறது
மௌன மொழி பேசு கண்ணே
அதை பேசிப் பேசி
உன் உதடும் உள்ளமும்
சத்தமில்லா சத்ததிற்குள் புதைக்காதே
அவை என் காதில்
ஈயத்தை ஊற்றிய
உணர்வை ஏற்படுத்துகிறது
காதலை பேசு
என் காதருகே
கூசும் வரை பேசு
குறைந்த பட்சம் என்னை ஏசு
வார்தை செதுக்கி வடித்து விட்டால்
வடிந்து போகும் வாக்கியங்கள்
மலர்ந்து வரும் மன வாக்கியங்கள்
சந்தேகத்தை சிந்திக்காதே
சந்தொஷத்தை சிந்தி
உனக்கு சொல்வேன்
சொன்னதை ஊருக்கும் சொல்வேன்
கடிகாரத்தை நிறுத்த
கணக்கு பார்க்காதே
கருணை காட்டு
சொல்வதும் புரியலை
சொன்னதும் தெரியலை
உன்னை நினைத்ததும் நான்
காற்றில் பறக்கும் காகிதமானேன்.
மனதில் தோன்றிய எண்ணங்களை
மெல்லிய மயக்கத்தோடு
என் கையாலே காகிதத்தில் ஏற்றினேன்
கரும்பாரை யானது காகிதம்
புயல் காற்றுக்கும் அசங்காமல் நின்றது
மனபாரம் போய் சின பாரமானது
அது உன்னை பார்த்ததும்
எரிமலையாய் வெடித்தது
வாடைகாற்றில் வாடிய பூ இதழ்கள் போல்
வதங்கி போனது உன் முகம்
செங்கல் சூளைக்குள் என் சொற்களை
வைத்து சூடு பறக்க சொல்லை வீசி
உன் பார்வை எனும் சுழல் காற்றுக்குள்
சுறுங்கிப் போன பஞ்சானது
வஞ்சி உன் பிஞ்சு விரல்கள் பட்டது
பட்ட மரமான என் மனதிலும்
இளந்தளிர் கண்டேன் நான்
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Thursday, January 07, 2010 0 பதில் மடல்