உதிக்கும் கதிரின் வெளிச்சத்தில் குறை ஏதுமில்லை
சுரக்கும் நீரூற்றின் சுவையில் குறை ஏதுமில்லை
வீசும் காற்றின் வேகத்தில் குறை ஏதுமில்லை
பூக்கும் பூவின் இதழில் குறை ஏதுமில்லை
பூமி சுழலும் முறையில் குறை ஏதுமில்லை
குளிர் நிலவின் ஒளியில் குறை ஏதுமில்லை
வளரும் பயிரின் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பறக்கும் பறவையின் ஆற்றலில் குறை ஏதுமில்லை
நெளியும் புழுவின் வாழ்வில் குறை ஏதுமில்லை
நீந்தும் மீனின் ஓட்டத்தில் குறை ஏதுமில்லை
கடல் அலையின் சீற்றத்தில் குறை ஏதுமில்லை
மலை பாறை உறுதியில் குறை ஏதுமில்லை
இருக்கும் மண்ணின் வளத்தில் குறை ஏதுமில்லை
பெய்யும் மழையின் ஈரத்தில் குறை ஏதுமில்லை
மாறும் பருவ நிலையில் குறை ஏதுமில்லை
சீறும் சிங்கத் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பதுங்கி பாயும் புலியிடம் குறை ஏதுமில்லை
நீர் தேடும் மரவேர்களில் குறை ஏதுமில்லை
வளைந்து படரும் கொடியில் குறை ஏதுமில்லை
பாய்ந்து ஓடும் ஆற்றில் குறை ஏதுமில்லை
துள்ளித் திரியும் மானிடம் குறை ஏதுமில்லை
கானம் பாடும் குயிலிடம் குறை ஏதுமில்லை
பார்த்து படைத்த மனித மனதில்தான்
என்ன குறை என்று இறைவனுக்கு விளங்கவில்லை.
Friday, April 25, 2008
குறை ஏதுமில்லை..
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Friday, April 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மடல்காரா, உனக்கு ஏனப்பா மனித மனத்தில் அவ்வளவு வெருப்பு? இவ்வளவு அழகாக கவிதை எழுதும் உன் மனதில் ஏதும் குறை இருப்பதாக எனக்கப் படவில்லையே!!!
வந்தனம் சலூன் செய்திகளுக்கு,
அடுத்தவரை குறை கூறுவதும் ஒரு குறைதானே.!
அன்புடன், கி.பாலு
மனிதர்களிடம் குறை உள்ளதே தவிர மனித மனதில் இல்லையே!
மனிதன் எங்கே இருக்கிறான்?
அவனில் குடிகொண்டு இருப்பதே விலங்குகள் தானே?
நாகரீகம் வெளித்தோற்றத்தில் மட்டும் தானே தோன்றியுள்ளது.
உள்ளுக்குள் அவன்............
மனிதன் எங்கே இருக்கிறான்.....
வந்தனம் Madurai Citizen அவர்களே..
மனிதன் செய்யும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவன் மனதுதான் காரணம். அதனால அது சரியா இருந்ததுன்னா எல்லாமே சரியாதான் இருக்க்கும். அப்பிடிங்கறது என்னுடைய சின்ன அபிப்ராயம்.
அன்புடன், கி.பாலு
Post a Comment