Tuesday, June 5, 2012

காதல் என்னும் இமை!

காதலுக்கு கண் இல்லை

அவள் கருப்பா சிவப்பா தெரியவில்லை
அவள் நெட்டையா குட்டையா தெரியவில்லை
அவள் குண்டா ஒல்லியா தெரியவில்லை
அவள் அழகா அசிங்கமா தெரியவில்லை
அவள் நெருங்கிய சொந்தமா, தூரத்து சொந்தமா

தெரியவில்லை..
உண்மைதான் காதலுக்கு கண் இல்லை!

ஆனால் அவனுக்காக அவளும்

அவளுக்காக அவனும்

இறைவனிடம் வேண்டுகிறார்கள்..

காதலுக்கு இமை உண்டு
கண் போன்ற காதலை காப்பதற்கு.!

Monday, June 4, 2012

சோகம்.!

சூழ்நிலையின் தோன்றல்

சொல்லாமல் தரும் வருகை
நில்லாமல் உறிஞ்சும் சுகத்தை
பெருங்கடல் ஆழத்தைவிட ஆழம் கொண்டது
சுழற்றி அடித்து மிரள வைக்கும்

சுருங்க சொன்னால் உரைய வைக்கும்
ஓடி ஒளிந்தாலும் உறங்க விடாது

உண்மை நிலையை உணர விடாது
அழையாமல் நுழையும் சோகம்,
உள்ளத்தின் சுகத்தை உறங்கச் செய்யும்.!

Tuesday, May 29, 2012

பிழையான விஷம்.!

நினைவென்னும் பிழை
மனமென்னும் விஷம்
நிகழ்வென்னும் கொடுமை
அனைத்தும் நிழலாடும் போது
உதிரம் ஓடா உடம்பாக தோன்றுகிறது
சிதை தீயில் விழுந்த
புழுவாக துடிக்கும் உள்ளம்.


பிடித்த நிகழ்வு
நினைவில் நிழலாடி
உறக்கத்திலும் ஒரு கிறக்கம்
கள்ளுண்ட மனம் தன்னை
கடவுள் என நினைக்கும்.


விசித்திரம் கொண்ட உள்ளமெனும் ஊரில்
சுற்றித்திரியும் ஏழை நான்.

Saturday, May 26, 2012

மனப் புழுக்கம்

மனதின் புழுக்கம் பழக்கம் ஆனபின்
வழக்கத்தை மாற்றுவதில் பயனில்லை
இந்த உள்ளே வெளியே  விளையாட்டில்
வெளியே உள்ளது உள்ளே தெரியக் கூடாது
உள்ளே உள்ளது வெளியே தெரியக் கூடாது

மௌனம்




நான் ஆண் நீ பெண் என்பதாலோ

அல்லது

நான் பெண் நீ ஆண் என்பதாலோ

அதன் அடர்ந்த சத்தம் என் காதில் விழுகிறது.!

 
software software