Tuesday, February 15, 2011

மாறாக் காதல்.!

உன் முத்தங்கள் மொத்தமும்
என் உள்ளங்கையில் பொத்தி வைத்தேன்
உன் உதடின் கோடுகள் என் கை ரேகையாயின
அதுவே என் வாழ்கையின் ஆருடக் கோடுகளாயின
என் எண்ணத்தில் வண்ணம் சேர்க்க
என்று எண்ணம் கொண்டாய்?
உன் கண்ணத்தில் நாணம்
விண்ணொளியாய் மின்னுகிறது எதனால்?

வானம் பார்த்த பூமியாய் இருந்த என் மனம்
உன்னைப் பார்த்ததும்
வாசல் பார்த்த சாமியாய் நிற்கிறது!

சொல் இல்லா வாக்கியம் பொருள் ஆகாது
நீ இல்லா வாழ்கை இனிக்காது!
மாறன் அம்பினாலும் மறிக்காத காதல்
என்னுடைய மாறாக் காதல்

Monday, February 14, 2011

காதல்(லர்) தின(மு)ம்..!

கழுத்தில் கை வைக்கும் பிடி இருக்கும்
தன் முகம் மறைக்கும் விழி பிதுங்கும்
நா குளரும் சொல் உருளும்
கடலும் கடுகாகும் கடுகும் கடலாகும்
மலையும் மடுவாகும் மடுவும் மலையாகும்
உன் நிலை அழித்து தன்னிலைக்கு கொண்டுவரும்
சூழ் நிலை மறைக்கும் பித்து பிடிக்க வைக்கும்
ஆனால் மருந்தில்லை
உனக்கென நான் எனக்கென நீ என உளரச் சொல்லும்

வாழ வைக்கும் வழுக்கவும் செய்யும்
எல்லாம் இந்த கரும(மா)ந்திரக் காதல் செய்யும் வினை.

 
software software