அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு!
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாரும் இல்லார்!
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை!
ஐயம் இன்றி சொல்வேன்!
ஒற்றுமை என்றும் பலமாம்!
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்.
நன்றி : http://thamizsangam.blogspot.com/
Wednesday, February 11, 2009
அ முதல் ஃ வரை
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Wednesday, February 11, 2009
Labels: கவிதை, குழந்தைகள், சுட்டது
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இதெல்லாம் தோணுது? நடத்துங்க..
நண்பருக்கு என் நன்றி !
தொடர்ந்து எழுத ஆதரவுதாருங்கள்.
Post a Comment