மெழுகும் உருகும்,
வெளிச்சம் விலகும்,
விரகம் உருக்கும்,
வெட்கம் கரையும்,
மனதை மறைக்கும்,
நித்திரை கலையும்
தொட துடிக்கும்,
விட மறுக்கும்,
ஓசை அடங்கும்
உள்ளம் படபடக்கும்,
எல்லாம் முதன் முதலில்தான்
அது முடிந்துவிட்டால்..
அடுத்தது அதிக வாழ்கை
Friday, November 13, 2009
இருளில் 'என்'ணம்..
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Friday, November 13, 2009 0 பதில் மடல்
Monday, October 12, 2009
வாழ்கை இன்பம்.
இன்பம் தேடும் மனம்.
துன்பம் ?
இனிப்பை தேடும் மனம்.
துவர்ப்பு ?
புகழ்ச்சியை தேடும் மனம்.
இகழ்ச்சி ?
உயர்வை தேடும் மனம்.
தாழ்ச்சி ?
வாழ்கை தொடரும் மனம்.
முடிவு ?
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Monday, October 12, 2009 0 பதில் மடல்
Friday, April 24, 2009
உன்னால் என்னை அறிந்தேன்.
மனத்தின் மணம் அறியாமல்
மன மகிழ் மன்றங்களை தேடும் மனம்.
உயிர்களை படைக்க உதவிய இறைவன்
உள்ளத்தை சுருக்கியது ஏனோ?
அல்லது என் கண்கள்தான் சுருங்கினவோ?
பசியினால் வயிற்றை அறிந்தேன்
வலியால் உயிரை அறிந்தேன்
ஒலியால் சொல்லை அறிந்தேன்
உளியால் சிலை அறிந்தேன்
உணர்வால் உள்ளத்தை அறிந்தேன்
உன்னால் என்னை அறிந்தேன்.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Friday, April 24, 2009 0 பதில் மடல்
Saturday, March 7, 2009
உலக மகளிர் தினம் 08 மார்ச் 09.
உலக மகளிர் தினம் 08 மார்ச் 09.
பெண்மையின் மகத்துவத்தை பெண்களும் உணர வேண்டும்.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Saturday, March 07, 2009 2 பதில் மடல்
Wednesday, February 11, 2009
அ முதல் ஃ வரை
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு!
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாரும் இல்லார்!
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை!
ஐயம் இன்றி சொல்வேன்!
ஒற்றுமை என்றும் பலமாம்!
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்.
நன்றி : http://thamizsangam.blogspot.com/
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Wednesday, February 11, 2009 2 பதில் மடல்
Labels: கவிதை, குழந்தைகள், சுட்டது
Sunday, January 25, 2009
காலத்தால் நினைக்கக்கூடியவை - 1
பாடலை எழுதியவர்: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் இடம் பெற்ற படம்: அரசிளங்குமரி
வருடம்: 1961
இசை: ஜி.ராமநாதன்
நடிப்பு: M.G.R & பத்மினி முதலானோர்
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா
(சின்னப்)
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி (ஆசை)
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-உன் (நரம்)
(சின்னப்)
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா (மனிதனாக)
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா (வளர்ந்து)
தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-
(சின்னப்)
+++++++++++++++++++++++++++++++++++++++
பாடலை எழுதியவர்: கவிஞர் A. மருதகாசி
பாடல் இடம் பெற்ற படம்: நீலமலைத் திருடன்
வருடம்: 1957
நடிப்பு: ரஞ்சன், அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா .
குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடலை எழுதியவர்: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்
பாடல் இடம் பெற்ற படம்: நாடோடி மன்னன்
வருடம்: 1958
நடிப்பு: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் & பி. பானுமதி
தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!
(தூங்)
நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்)
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்„டமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!
(தூங்)
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!
(தூங்)
நன்றி : http://devakottai.blogspot.com/
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Sunday, January 25, 2009 0 பதில் மடல்
Labels: எம்.ஜி.ஆர், சமூகம், தத்துவப்பாடல், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்