Thursday, February 25, 2010

நானும் பெண்ணாய் பிறந்தேனே..!

பெண்ணாய் பிறந்தேனே
நானும் பெண்ணாய் பிறந்தேனே.
கவியும் புவியும் வியக்க
காவியம் யாவும் படைக்க
காலம் எதுவும் தெரியாமல் நானும்
பெண்ணாய் பிறந்தேனே.

கணிவாய் அன்பை கண்ணில் இருத்தி
கடலாய் ஆசையை மனதில் வைத்து
அழகாய் என் அம்மா பெற்றெடுக்க நானும்
பெண்ணாய் பிறந்தேனே.

உள்ளங்கையில் உலக உருண்டை போல்
பருப்பை சேர்த்து பதமாய் பார்த்து
அம்மா செய்த சாதம் அதை உண்டு
மகிழ நானும் பெண்ணாய் பிறந்தேனே.

வெள்ளை உள்ளம் கள்ளம் இல்லா
நல்ல உள்ளம் பிள்ளை சொல்லும்
நிலவின் ஒளியும் அதன் நிறமும்
கண்டு மகிழ நானும் பெண்ணாய் பிறந்தேனே.

ஆடி ஓடி விளையாடி
ஆட்டம் போட்டு கொட்டம் அடித்து
சட்டமில்லாமல் வெட்ட வெளியில் குதித்து ஆட
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

நகை அனிந்து சிகை பின்னி
வகை வகையாய் தின்பண்டம் செய்து
வக்கனயாய் ஆக்கி போட நானும்
பெண்ணாய் பிறந்தேனே.

அருமைகளும் பெருமைகளும்
அளவல்லாமல் இருந்தும் அகிலம் அறியாததால்
அதுவும் அறியாததால் உள்ளம் நொந்து கொள்ள
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

என் இனத்தை நானே வெறுத்து
ஆண்ணை ஈன்ற துடிக்கும் அறிவை பெற்று
பெண்ணை கொல்லும் மடமையை சமூகத்தில் வாழ
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

சாதிக்க துடித்து சந்தைக்கு வந்து
சத்தமில்லாமல் சாதனை செய்து
சாத்திரம் பேசும் மனிதரை பார்க்க
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

கள்ளத்தனமாய் காதல் வந்தும்
சொல்லதெரியாமல் சோகத் தவிப்பு சூழ்ந்தும்
நிலை கொள்ளாமல் என் நிலையை காண
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

அன்பின் ஊற்றை அகத்தினில் வைத்து
அகிலத்திற்கு அதனையும் அள்ளி தந்து
கிள்ளி தர தெரியா சமூகத்தில்
நானும் பெண்ணாய் பிறந்தேனே.

விடியும் நாள் விரைவில் வரும் என்று
விடிய விடிய உறங்கா விழியுடன்
நம்பிக்கை துணையுடன் காலம் கடத்தும் பெண்ணாய்
நானும் இந்த பூமியில் பிறந்தேனே.

 
software software