Thursday, January 7, 2010

படைத்தானே...!

கண்ணை மூடிக் கொண்டு
கனவுகளை தொலைக்காமல்
காலங்களை கடத்தாமல்
காதலும் செய்யாமல்
கடமை மட்டும் செய்தால்
கடவுள் என்ன செய்வார்?
படைப்பை செய்தவன்
பாவத்தை ஏன் சொன்னான்?
பழக செய்தவன்
பண்பை ஏன் சொன்னான்?


உன் வார்த்தையை
ஏன் உதட்டிலேயே ஒட்டவைத்திருக்கிறாய்
உதிர்பதற்கு ஒரு யுகமா?
உள்ளத்தில் பூட்டி உறங்க வைக்காதே
உயரத்தில் வைத்து ஒதுக்கிவிடு
என்னிடம்
நம்பிக்கை
வளரும் போது நகங்களாய் நறுக்காதே
அதை விழுங்கவும் செய்யாதே
உன் இதயத்தை தாண்டி இறங்கும் போது
என்னில் கீறல்கள் ஏற்படுத்துகிறது
உன் நகங்கள் விரல்களில் இருந்தால்
கீரிடம் அணிந்த
தேவதைகளாய் இருக்கிறது

மௌன மொழி பேசு கண்ணே
அதை பேசிப் பேசி
உன் உதடும் உள்ளமும்
சத்தமில்லா சத்ததிற்குள் புதைக்காதே
அவை என் காதில்
ஈயத்தை ஊற்றிய
உணர்வை ஏற்படுத்துகிறது
காதலை பேசு
என் காதருகே
கூசும் வரை பேசு
குறைந்த பட்சம் என்னை ஏசு

வார்தை செதுக்கி வடித்து விட்டால்
வடிந்து போகும் வாக்கியங்கள்
மலர்ந்து வரும் மன வாக்கியங்கள்
சந்தேகத்தை சிந்திக்காதே
சந்தொஷத்தை சிந்தி
உனக்கு சொல்வேன்
சொன்னதை ஊருக்கும் சொல்வேன்
கடிகாரத்தை நிறுத்த
கணக்கு பார்க்காதே
கருணை காட்டு
சொல்வதும் புரியலை
சொன்னதும் தெரியலை

உன்னை நினைத்ததும் நான்
காற்றில் பறக்கும் காகிதமானேன்.
மனதில் தோன்றிய எண்ணங்களை
மெல்லிய மயக்கத்தோடு
என் கையாலே காகிதத்தில் ஏற்றினேன்
கரும்பாரை யானது காகிதம்
புயல் காற்றுக்கும் அசங்காமல் நின்றது
மனபாரம் போய் சின பாரமானது
அது உன்னை பார்த்ததும்
எரிமலையாய் வெடித்தது
வாடைகாற்றில் வாடிய பூ இதழ்கள் போல்
வதங்கி போனது உன் முகம்
செங்கல் சூளைக்குள் என் சொற்களை
வைத்து சூடு பறக்க சொல்லை வீசி
உன் பார்வை எனும் சுழல் காற்றுக்குள்
சுறுங்கிப் போன பஞ்சானது
வஞ்சி உன் பிஞ்சு விரல்கள் பட்டது
பட்ட மரமான என் மனதிலும்
இளந்தளிர் கண்டேன் நான்

 
software software